சீனாவில் ஒரே நாளில் ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இது கடந்த சில நாட்களாக பதிவாகி வந்த உச்சபட்ச பாதிப்புகளைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 92 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.