சென்னை: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழர் நலனுக்காகவும், தமிழகம் தன்னிறைவு பெறுவதற்கும் அதிமுக தொடர்ந்து பாடுபடும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.