மும்பை: கடந்த அமர்வில் இந்திய சந்தையானது சரிவில் முடிவடைந்ததையடுத்து, இன்றும் சரிவு தொடரலாமோ என்ற அச்சம் நிலவி வந்தது. ஏனெனில் பல்வேறு காரணிகளும் சந்தைக்கு எதிராகவே இருந்தன. இதற்கிடையிலும் இன்று காலை தொடக்கத்திலேயே இந்திய சந்தைகள் பலத்த ஏற்றத்தில் தொடங்கின.
இது முதலீட்டாளர்களுக்கு பெரும் ஆறுதலாய் அமைந்தது. முடிவிலும் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக நல்ல ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. அதேபோல அனைத்து துறைகளுக்கான குறியீடுகளும் நல்ல ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக பல முக்கிய குறியீடுகளும் 2% மேலாக ஏற்றத்தில் காணப்பட்டன.
ஜி ஜின்பிங் செய்த காரியத்தால் 1 லட்சம் கோடி டாலர் நஷ்டம்.. அழுது புலம்பும் 2 நிறுவனங்கள்..!
அதெல்லாம் சரி, முடிவில் சென்செக்ஸ், நிஃப்டியின் நிலவரம் என்ன? டாப் கெயினர் பங்குகள் என்னென்ன? டாப் லூசர் பங்குகள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்
தொடக்கம் எப்படி?
இன்று காலையில் சந்தையானது ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தொடங்கியிருந்த நிலையில், தொடக்கத்தில் சென்செக்ஸ் 816.35 புள்ளிகள் அதிகரித்து, 56,593.20 புள்ளிகளாகவும், நிஃப்டி 237.40 புள்ளிகள் அதிகரித்து, 16,900.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1690 பங்குகள் ஏற்றத்திலும், 241 பங்குகள் சரிவிலும், 52 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
முடிவு எப்படி?
பிஎஸ்இ சென்செக்ஸ் முடிவில் 1039.80 புள்ளிகள் அல்லது 1.86% அதிகரித்து, 56,816.65 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 312.30 அல்லது 1.87% புள்ளிகள் அதிகரித்து 16,975.30 புள்ளிகளாகவும் முடிவுற்றுள்ளது. இதற்கிடையில் 2241 பங்குகள் ஏற்றத்திலும், 1105 பங்குகள் சரிவிலும், 96 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடந்துள்ளது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ்,நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஆட்டோ,பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாகவும், மற்ற அனைத்து குறியீடுகளும் 1% மேலாகவும் முடிவடைந்துள்ளன.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் நிஃப்டி குறியீட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட், ஆக்சிஸ் வங்கி, இந்தஸ்இந்த் வங்கி, ஸ்ரீ சிமெண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதுவே சிப்லா, சன் பார்மா, பவர் கிரிட் கார்ப், டாடா கன்சியூமர் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட், ஆக்சிஸ் வங்கி, இந்தஸ்இந்த் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதுவே சன் பார்மா, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன. தொடர்ந்து இரண்டாவது நாளாக பார்மா பங்குகள் சரிவில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
closing bell: sensex jumps above 1000 points, nifty ends above 16,900
closing bell: sensex jumps above 1000 points, nifty ends above 16,900 /சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் முடிவு.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. ஏன்?