புதுடெல்லி:
5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், அந்த 5 மாநில கட்சி தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கேட்டுக்கொண்டிருந்தார். இதற்கிடையே ஜி-23 என்ற காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் கூட்டம் இன்று நடக்கிறது.
டெல்லியில் உள்ள மூத்த தலைவர் கபில்சிபல் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு காங்கிரஸ் சிறந்த சவாலாக இருக்கும் – பிரசாந்த் கிஷோர் கணிப்பு