Thanjavur NIFTEM recruitment 2022 apply soon: தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான, தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில், துணை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.04.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
துணை ஆசிரியர் (Adjunct Faculty)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : M Tech./M.Sc./Ph.D. with specialization in Post-Harvest Technology/ Food Technology/ Food Engineering/ Food Science/ Food Science and Technology/ Food Science and Nutrition/Chemistry/ Analytical Chemistry/Biochemistry or Agricultural Engineering / Chemical Engineering specialized in Food Process Engineering. மற்றும் 10 வருட பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : ரூ. 80,000
உடற்கல்வி ஆசிரியர் (Physical Education Teacher)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Master Degree in Physical Education. மற்றும் 5 வருட பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : ரூ. 36,000 – 42,000
முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் (Senior Research Fellow)
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித் தகுதி : M.Tech / M.Sc. / Ph.D. degree in Food Process Engineering/ Food Engineering/ Chemical Engineering/ Food Technology/ Agricultural Processing/ Food and Agricultural Processing/ Food Science/ Food Science and Technology/ Food Science and Nutrition/ Food and Nutrition/ Food Chemistry/ Food Technology and Management/ Food Process Engineering and Management/ Food Plant Operations and Management/ Food Safety and Quality Management/ Food Supply Chain Management/ Post Harvest Technology/ Food Process Technology/ Food safety and quality Assurance/ Biotechnology/ Nanotechnology/ Chemistry/ Analytical Chemistry / Biochemistry
சம்பளம் : ரூ. 31,000 + HRA
இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் (Junior Research Fellow)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : M. Tech degree in Food Process Engineering/ Food Engineering/ Food Technology/ Agricultural Processing/ Food and Agricultural Processing/ Food Science/ Food Science and Technology/ Food Science and Nutrition/ Food and Nutrition/ Food Chemistry/ Food Technology and Management/ Food Process Engineering and Management/ Food Plant Operations and Management/ Food Safety and Quality Management / Food Supply Chain Management/ Post Harvest Technology/ Food Process Technology/ Food safety and quality Assurance
சம்பளம் : ரூ. 31,000 + HRA
திட்ட உதவியாளர் (Project Assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : M.Tech/ M.Sc. degree in Microbiology/ Biotechnology/ Food Technology/ Food Safety & Quality Assurance
சம்பளம் : ரூ. 20,000
இதையும் படியுங்கள்: வருவாய்த்துறை வேலைவாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித்தகுதி போதும்!
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்கள் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். துணை ஆசிரியர் பணியிடங்களுக்கு 70 வயது வரையிலும், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு 50 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500, இருப்பினும் SC/ST, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://niftem-t.ac.in/careersrf.php மற்றும் http://niftem-t.ac.in/careermsrf.php என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர், அதனை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து கையெழுத்திட வேண்டும். பின்னர் இதனை ஸ்கேன் செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.04.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற http://niftem-t.ac.in/docs/Advertisment1-NIFTEM-T.pdf மற்றும் http://niftem-t.ac.in/docs/Advertisment2-NIFTEM-T.pdf இணையதளப் பக்கங்களைப் பார்வையிடவும்.