திருச்சியில் பெண்களுக்கு எதிராக செயல்படும் நீதிபதியை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதியாக மணிவாசகன் என்பவர் பணியாற்றி வருகிறார். அவரிடம் பல்வேறு குடும்ப நல வழக்குகளும், ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களது வழக்குகளும் விசாரணைக்கு கொண்டு வரப்படுகிறது. அதை அவர் முறையாக விசாரணை செய்யாமல், எல்லா வழக்குகளிலும் பாரபட்சமாக பெண்களுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்குவதாக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தொடர்ந்து பெண்களுக்கு எதிராகவும், ஆண்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக, நீதிபதி மீது மீது புகார்கள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் விசாரணையும் நடந்து வருகிறது.
இந்நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்யாமல் விசாரணை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியும், அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM