நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் உற்சாகமாக உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக பரவி வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த ஆண்டு குறைந்துள்ளது.
நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பலர் ஹோலியை உற்சாகத்துடன் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். ஹோலி 2022 அன்று உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவிப்பதன் மூலம் டிஜிட்டல் ஹோலியைக் கொண்டாடலாம்.
டிஜிட்டல் ஹோலி
மேலும், உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தும் ஹோலி வாழ்த்தை அன்புக்குரியவர்களுக்கு பரிசாக்கலாம். குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான வாட்ஸ்அப்-இல் இருந்து உங்களின் அன்பை வெளிப்படுத்தும் ஹோலி வாழ்த்துக்களை அனுப்பலாம்.
5G போன் வாங்க நல்ல நேரம் – Flipkart பிக் சேவிங்ஸ் டே டீல்ஸ்!
டெக் வளர்ச்சியடைந்து வரும் இக்காலத்தில், WhatsApp என்பது பயனர்கள் அரட்டையடிக்க முதன்மையான செயலியாக பயன்படுத்தப்படுகிறது. எனவே, நீங்கள் WhatsApp சிறப்பு ஹோலி ஸ்டிக்கர்கள் மூலம், தொலைதூர உறவினர்களை இந்த நன்னாளில் வாழ்த்தலாம்.
வாட்ஸ்அப் ஹோலி ஸ்டிக்கர்ஸ்
வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை அனுப்புவது பயனர்கள் மத்தியில் தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது. பிறந்தநாள் முதல் எந்தப் பண்டிகை வரையிலும், ஸ்டிக்கர்கள் மூலம் நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்துகளை அனுப்புவோம்.
சாதாரண ஹோலி வாழ்த்து ஸ்டிக்கர் மட்டுமின்றி, உங்களது சொந்த படத்தை வைத்தும் ஸ்டிக்கர்களை உருவாக்கலாம். உங்கள் விரும்பத்திற்கேற்ப கார்ட்டூன் அல்லது உங்கள் புகைப்படத்தையும் ஒவ்வொருவருக்கும் மாற்றி அனுப்பலாம்.
ஹோலிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு WhatsApp ஸ்டிக்கர்களை அனுப்புவதன் மூலம் டிஜிட்டல் ஹோலியைக் கொண்டாடலாம். எனவே, வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை எப்படி அனுப்புவது என்பதை தெரிந்துகொள்வோம்.
ஹோலி வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களைப் பதிவிறக்கும் வழிமுறைகள்
முதலில் வாட்ஸ்அப் செயலியைத் திறக்கவும்.இப்போது டைப் செய்து செய்தி அனுப்பும் ‘சாட் பாக்ஸ்’ பக்கத்தில் உள்ள ஸ்மைலி ‘Smiley’ ஐகானை கிளிக் செய்யவும்இங்கே நீங்கள் GIFகள் மற்றும் ஸ்டிக்கர்களின் விருப்பத்தைக் காண்பீர்கள்அதில் உள்ள ஸ்டிக்கர் ஐகானை கிளிக் செய்யவும்மேலும் ஸ்டிக்கர்களைப் பெறு ‘Get Stickers’ என்ற விருப்பத்தை இங்கு காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் Google Play Store க்கு திருப்பி விடப்படுவீர்கள்ஹாப்பி ஹோலி ‘Happy Holi’ என்று இங்கே தேடுங்கள்அப்போது புதிய ஹோலி 2022 ஸ்டிக்கர்கள் உங்கள் மொபைல் திரையில் தோன்றும்இங்கிருந்து உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கர் பேக்கை பதிவிறக்கம் செய்யலாம்
அமேசானுடன் ஹோலி கொண்டாட்டம் – Holi Shopping Store சலுகைகள் உங்களுக்காக!
இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் உங்களின் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பகுதியில் நிறுவப்பட்டிருக்கும். இதை பயன்படுத்த சாட் பாக்ஸ் பகுதிக்கு சென்று ‘Smiley’ ஐகானை திறந்து, அதில் நீங்கள் பதிவிறக்கம் செய்த ஸ்டிக்கர்களை தேர்ந்தெடுத்து உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அனுப்பலாம். டிஜிட்டல் ஹோலியை மகிழ்ச்சி பொங்க கொண்டாடுங்கள்.