பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அப்பதவியிலிருந்து வெளியேறியுள்ளார்.
5 மாநில தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில், அம்மாநிலங்களிலுள்ள கட்சியின் மாநில தலைவர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டிருந்தார். கட்சியை மறு சீரமைப்பு செய்வதற்காக 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய சோனியா காந்தி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
சோனியா காந்தியின் உத்தரவை ஏற்று உத்தரப்பிரதேசம் (அஜய்குமார்), உத்தராகண்ட் (கனேஷ்கொடியால்), கோவா (சோடங்கர்) மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலகினர். இந்த வரிசையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து, தற்போது தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். சோனியா காந்தியின் உத்தரவை ஏற்று இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், பஞ்சாப்பில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்திருந்தது. பஞ்சாப்பை வீழ்த்தி, ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்திருந்தது.
சமீபத்திய செய்தி: `சோனியா காந்தி குடும்பம் காங்கிரஸிலிருந்து விலக வேண்டும்’- தொடரும் ஆதரவும் எதிர்ப்பும்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM