இஸ்லாமாபாத்: இந்திய ஏவுகணை ஒன்று, தவறுதலாக தனது எல்லையில் விழுந்த சம்பவத்தில், பாகிஸ்தானும் பதிலடி கொடுக்க தயாராக இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், கடைசி நேரத்தில், ஏவுகணை தவறுதலாக வந்தது தெரியவந்ததை தொடர்ந்து தனது திட்டத்தை பாகிஸ்தான் கைவிட்டதாக தெரிகிறது.
கடந்த, 9ம் தேதி நம் ஏவுகணை ஒன்று தவறுதலாக செலுத்தப்பட்டது.அது, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் விழுந்தது. இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த ஏவுகணை தவறுதலாக செலுத்தப்பட்டதாகவும், அது ஒரு விபத்து என்றும், மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளித்தது. இந்தியாவின் கருத்தை அமெரிக்காவும் ஏற்று கொண்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வந்த ஏவுகணைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்தியாவில் இருந்து சூப்பர் சோனிக் ஏவுகணை ஏவப்பட்ட உடன், பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயாராக இருந்ததாகவும், பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைக்கு பதிலடியாக அதேபோன்ற ஏவுகணையை இந்தியா மீது ஏவ பாகிஸ்தானும் தயார் நிலையில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இந்தியாவிலிருந்து தவறுதலாக ஏவுகணை வந்தது தெரிய வந்ததை தொடர்ந்து பாகிஸ்தான் தனது திட்டத்தை கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement