‘பப்ளிக் லைஃப் வந்துட்டா என் தோற்றத்தைப் பற்றி கவலைப்படக் கூடாதா?’ தமிழச்சி பதிலடி

DMK MP Thamizhachi Thangapandian Interview Viral : எழுத்து, இலக்கியம்,  அரசியல் என்று பறவையாக பறந்துகொண்டிருக்கும் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தனது தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது குறித்து பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், இந்த விமர்சனத்திற்கு இவர் பதிலடி கொடுத்துள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவர்களின் ஒருவரான தங்கபாண்டியனின் மகள் தான் தமிழச்சி தங்கபாண்டியன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுக சார்பில தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அரசியல் தவிர்த்து சினிமாவிலும் தனக்கென தனி இடம்பெற்றுள்ள தமிழச்சி தங்கபாண்டியன், தனது தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உங்களுக்கு அழகான வேட்பாளரை கொடுத்துள்ளோம் என்று கூறியிருந்தார். பொதுப்பணிகளில் தமிழச்சி தீவிரமாக செயல்பட்டு வந்தாலும், இவர் தனது அழகிற்கு முக்கியத்துவம் அளிப்பவர், இவர் மேக்கப் போடுவதற்கே ஒரு மணி நேரம் ஆகும் இப்படி இருக்கும்போது இவர் எப்படி பொது பிரச்சினைக்கு செல்வார் என்று பலரும் விமர்சனங்கள் செய்வது நடந்து வருகிறது.

இவ்வாறு தன்னை விமர்சனம் செய்பவர்களுக்கு தான் அளித்த பேட்டி ஒன்றில் தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

தமிழர்களே அழகுணர்ச்சி மிக்கவர்கள்தான். ஒரு அழகு நிலையத்திற்கு சென்றுதான் உங்களை அழகுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பது கிடையாது. வீட்டில் அரைக்கும் தோசைமாவுதான் உங்களுக்கு மிக சிறந்த அழகு பொருள். அதேபோல் பால் காய்ச்சும்போது அதில் இருக்கும் ஆடைகளை முகத்தில் முகத்தில் பூசிக்கொண்டு, யோகா, உடற்பயிற்சி, தொட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளை செய்தாவே போதுமானது.

பெண்கள் பொதுவாழ்க்கைக்கு குறிப்பாக அரசியலுக்கு வந்துவிட்டால், அவர்கள் தங்களது தோற்றத்திற்கு முக்கியத்தும் அளிக்க கூடாது என்பார்கள். இவங்க எம்பியா இருக்காங்க தலையில பூ வச்சிக்கிறாங், மேட்ச்க்கு மேட்சா வளையல் போட்டுக்கிறாங்க என்று சொல்வார்கள். எம்பி ஆகிவிட்டால் என்ன? கலை உணர்ச்சி அழகுணர்ச்சி என எல்லாத்தையும் விட்டுவிட வேண்டுமா? எதற்காக விட வேண்டும்? நான் ஆடம்பரமாக உடை அணியவில்லை. வைரத்தால் என்னை அலங்கரித்துக்கொள்ளவில்லை. பகட்டான பட்டுப்புடவைகளை அணிந்துகொள்ளவில்லை.

நான் அணிவது அனைத்துமே கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்களால் செய்யப்பட்டதுதான். மலர்களால் சந்தனத்தால் அலங்கரித்துக்கொள்வது தமிழர்களின் வாழ்க்கைமுறை. பலர் சொல்வார்கள் இவருக்கு மேக்கப்போடவே டைம் சரியா இருக்குமே இவங்க எப்படி பொதுப்பிரச்சினைக்கு போர்வார்கள் என்று சொல்வார்கள். நான் பொதுப்பிரச்சினைக்கு 6 மணிக்கு செல்ல வேண்டும் என்றால் 4.30 மணிக்கே எழுந்துகொள்ள போகிறேன். நான் என்னை நேர்த்தியாக வெளிப்படுத்துவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நான் மற்றவர்களுக்காக அதை செய்யவில்லை. என் மகிழ்ச்சிக்காக செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு மகளிர் தினத்தில் ஆதன் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதனை தமிழச்சி தங்கபாண்டியன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.