இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 1990-களில் காஷ்மீரில் வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்ட திரைப்படம் இது. இந்த திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரதமர் மோடி உட்பட பல்வேறு பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டி இருந்தனர்.
இந்நிலையில் முதல் ஐந்து நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் செய்துள்ள தொகை குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. மொத்தமாக 60.20 கோடி ரூபாயை நேற்று வரை இத்திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த படம் சுமார் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சினிமா விமர்சகர் மற்றும் டிரேட் குருவான தரண் ஆதர்ஷ் ட்வீட் செய்துள்ளார். குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்த படத்தில் 100 சதவிகித வரி விலக்கை வழங்கியது குறிப்பிடத்தக்கது.