இஸ்லாமாபாத் : பார்லி., மீதான தாக்குதல் வழக்கில் இருந்து பாக்., ஜனாதிபதி அல்வி, வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் பார்லி., மீது, 2014ல் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக, பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சியை சேர்ந்தவரும், தற்போது ஜனாதிபதியாக உள்ளவருமான, ஆரிப் அல்வி, வெளியுறவுத் துறை அமைச்சரான ஷா முகமது குரேஷி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி முகமது அலி வர்ராய்ச், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இதே வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் பாக்., பிரதமரான இம்ரான் கான் விடுவிக்கப்பட்டார்.
இஸ்லாமாபாத் : பார்லி., மீதான தாக்குதல் வழக்கில் இருந்து பாக்., ஜனாதிபதி அல்வி, வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.நம் அண்டை நாடான பாகிஸ்தான் பார்லி.,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.