சஹாரா பாலைவனத்தில் இருந்து எழுந்த புழுதி ஐரோப்பா முழுவதும் பரவியுள்ள நிலையில் பிரித்தானியாவைத் தாக்கத் தொடங்கியுள்ளது.
பிரித்தானிய மக்கள் ஆரஞ்சு நிற வானம் மற்றும் இரத்த நிறத்தில் மழை தொடர்பில் புகாரளித்துள்ளனர்.
பிரித்தானியா முழையும் புழுதி மூடிய நிலையில் காணப்பட்டதுடன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், உடைகள், பூந்தோட்டங்கள் உள்ளிட்டவைகளில் தூசி காணப்பட்டதுடன், இரத்த நிறத்தில் மழையும் பெய்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஹேர்ஃபீல்ட் மிடில்செக்ஸைச் சேர்ந்த ரெபேக்கா புஷ்பி என்பவர் இது தொடர்பில் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பதிவேற்றியிருந்தார்.
இதுபோன்ற ஒரு சூழலை தாம் சந்தித்ததில்லை எனவும், தங்கள் பகுதி இவ்வளவு அழுக்காக இருக்கிறதே என எண்ணியதாகவும், ஆனால் அதன் பிறகு தான், படிந்த புழுதியில் மண் கலந்திருப்பதை உணர்ந்ததாகவும் ரெபேக்கா தெரிவித்துள்ளார்.
செலியா புயல் உலகம் முழுவதும் புரட்டி எடுத்துள்ள நிலையில் அட்லாண்டிக் பகுதி முழுவதும் புழுதி சுழன்றடிக்கிறது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாசா வெளியிட்ட புகைப்படங்களில் பூமியின் மேற்பரப்பின் பெரும் பகுதியில் மிகப்பெரிய புழுதி மேகங்களைக் காட்டுகின்றன.
மட்டுமின்றி, ஐரோப்பா முழுவதும் சஹாரா மணல் புயல் வீசியதால், பிரித்தானியா முழுவதும் வானம் வினோதமான இரத்தக்களரி ஆரஞ்சு நிறமாக மாறியுள்ளதால் மக்கள் அச்சம் மற்றும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.