பெங்களூரு : பெங்களூரில் வெறி நாய்களின் தொல்லை குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் விவாதித்தனர். நாய் பராமரிப்பு பள்ளி ஆரம்பிக்கும்படி அறிவுறுத்தினர்.கர்நாடக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:பா.ஜ., – ரவிசுப்பிரமணியா: பெங்களூரில் வெறி நாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை. பலரை கடித்து துன்புறுத்துகிறது. எனவே தெரு நாய்களுக்கு பெங்களூரு
புறநகரில் நாய் பராமரிப்பு பள்ளி ஆரம்பிக்க வேண்டும்.சட்டத்துறை அமைச்சர் – மாதுசாமி: பெங்களூரில் வெறி நாய்களை கட்டுப்படுத்த, சந்தான சிகிச்சை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அனைத்து தெரு நாய்களுக்கும் கட்டாயமாக நோய் தடுப்பு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.உச்சநீதிமன்ற தீர்ப்பால், நாய்களை தொட கூட முடியாது. பெங்களூரில் இருந்து வெளியே கொண்டு சென்று விட முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பால் அரசு செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இருந்தாலும் முதல்வருடன் ஆலோசித்து, புறநகரில் நாய்
பராமரிப்பு பள்ளி ஆரம்பிப்பது குறித்து ஒரு தீர்மானத்துக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும்.பா.ஜ., – சதீஷ்ரெட்டி: பெங்களூரில் நாளுக்கு நாள் வெறி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.பா.ஜ., – சுரேஷ்குமார்: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நானும் கவனித்தேன். அந்த தீர்ப்பை பார்க்கும் போது, நாய்களால் நல்லது என்ற உணர்வு ஏற்படும்.எனவே வெறி நாய்களின் தொல்லை கட்டுப்படுத்த ஏதாவது நடவடிக்கை எடுங்கள் என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து அரசு கேட்கலாம்.வெறி நாய் கடியாமல் மக்கள் கஷ்டத்தை அனுபவிக்கின்றனர்.மாதுசாமி: உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது குறித்து மாநில அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசிக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
Advertisement