பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் விவரம்..! மத்திய மந்திரி வெளியிட்டார்

புதுடெல்லி,
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் மற்றும் அந்த வழக்குகளில் தண்டனை விகிதம் உள்ளிட்ட விவரங்களை மாநிலங்களைவையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக வெளியிட்டார்.

அதில் 2018-2020 வரையிலான கால கட்டங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவான, பெண்கள் எதிரான பாலியல் பலாத்கார வழக்குகள் மற்றும் அந்த வழக்குகளில் வழங்கப்பட்ட தண்டனை விகிதம் குறித்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, 2020 மற்றும் 2019 ஆண்டு கால கட்டத்தில், இந்தியாவிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 5310 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் 45.9 சதவீத வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளன. அதேபோல 2019ம் ஆண்டு, 5997 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் பாதிக்கு பாதி 49.5 சதவீத வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளன. 
2018ம் ஆண்டில் அதிகபட்சமாக மத்தியபிரதேசத்தில் 5433  வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் 26.6 சதவீத வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 2020ம் ஆண்டு 389 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் 20.9 சதவீத வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளன. 2019ம் ஆண்டு 362 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் 16.7 சதவீத வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளன. 2018ம் ஆண்டு 331 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் 13.7 சதவீத வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.