முன்னாள் அதிகாரிகள், பெண்கள், புதுமுகங்கள் என உருவாகிறது யோகி ஆதித்யநாத்தின் புதிய அமைச்சரவை. டெல்லியில் பிரதமர் மோடி , மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுடன் அமைச்சரவையைக் குறித்து யோகி ஆலோசனை நடத்தினார்.
உத்தரப்பிரதேசத்தில் புதிய அமைச்சரவையை அமைப்பதற்கான பொறுப்பு அமித் ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் என்ற பெருமையைப் பெறும் யோகியின் அமைச்சரவை இந்த முறை துணை முதல்வர்களுடன் கூடிய அரசாக இருக்கும் என்று கூறப்படுகிறது.