பொருளாதார நெருக்கடிக்கு விரைவில் தீர்வு

பொருளாதார நெருக்கடிக்கு விரைவில் தீர்வு கிட்டும் என்று தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கொட்டகலை பிரதேச சபையின் ஏற்பாட்டில் சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் மகளிர் தின விழா, 15.03.2022 அன்று கொட்டகலை ரிஷிகேஷ் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,’இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு நாமும் பொறுப்பு சொல்ல வேண்டும் காரணம் நீங்கள் எமக்கு வாக்களித்துள்ளீர்கள்.இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் எடுத்து கூறியுள்ளோம். விரைவில் இதற்கு தீர்வு கிடைக்கும் என நம்புவோம்.

தீர்வுவர வேண்டுமாயின் அரசாங்கத்திற்கு நிலையான பொருளாதார திட்டம் ஒன்று தேவை. அந்தவகையில் நாங்களும் அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம்.

மலையக பெண்களின் சிந்தனையில் மாற்றம் வேண்டும். உதாரணமாக பெண்களின் கருத்துகள் வரவேற்கப்பட வேண்டும். முதலில் பெண்களை பேச கூடாது என்ற சிந்தனையில் மாற்றம் வேண்டும்.

மலையத்தின் பிரச்சினைக்கு கல்வி முறையே பிரதானமாக உள்ளது. குறிப்பாக ஆரம்ப கல்வி முறையில் மாற்றம் அவசியம் அதாவது ஆரம்ப பாடசாலைகளில் ஆணும், பெண்ணும் சமம் என்பதை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். ஆகவே ஆரம்ப பாடசாலைகளில் கல்விமுறை மாற்றப்பட வேண்டும். இந்த நிலையில், பிரஜா சக்தியூடாக இதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன’. என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன்

“இன்று பொருட்களுக்காக வரிசையில் நிற்பது அனைவருக்கும் தெரியும். நாங்களும் டிசலுக்காக வரிசையில் நிற்கின்றோம். நின்றுதான் டிசலை பெற்று கொள்கின்றோம். இதற்கு முன்னரும் இ.தொ.கா அரசாங்கத்துடன் பேசி மக்களுக்கானதை பெற்று கொடுத்துள்ளோம். சிலர் அரசாங்கத்தில் இருக்கையில் வாய் 

திறக்கவே இல்லை. காரணம் பதவி பறிபோகும் என்பதில் அவர்களக்கே பயம்.

இ.தொ.கவுக்கு நிர்வாகம் தெரியவில்லை என்றால் 11 உள்ளுராட்சி மன்றங்களை எவ்வாறு கைப்பற்றியது என கேட்க விரும்புகின்றேன்.

ஆளும் கட்சிக்கு நிதி கொடுப்பது போலவே எதிர்க் கட்சிக்கும் நிதி ஒதுக்குவதே எமது பிரச்சினை. ஆகவே இங்குள்ள உறுப்பினர்கள் வேலை செய்யாது விட்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல. காரணம் காங்கிரஸ் அனைத்து மக்களையும் ஒரே வகையில் பார்க்கின்றது.

 

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.