கலர்ஸ் தமிழ் டிவியில் தினமும் ஒளிபரப்பாகும் சீரியல் இதயத்தை திருடாதே. பிப்ரவரி 14, 2020 அன்று ஒளிபரப்பான இந்த சீரியல், சமீபத்தில் 1000 எபிசோட்களைக் கடந்தது. இதயத்தை திருடாதேயில் ஹிமா பிந்து நவின் குமார், ஆல்யா, மௌனிகா தேவி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இதில், சகானா’வாக நடித்து தமிழக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஹிமா பிந்து.
ஹிமா பிந்து, சமீபத்தில் தனது அழகு பராமரிப்பு குறித்து ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.
அவரிடம் ஷேவிங் அல்லது வேக்ஸிங் இரண்டில் எது தேர்வு செய்வீங்க என தொகுப்பாளர் கேட்க, அதற்கு பிந்து வேக்ஸிங் தான். ஷேவிங் பண்ணும் போது, தோல் வறண்டு, கடினமாகி விடும். அடுத்து வளரும் முடியும் அடர்த்தியாகும். அதனால் வேக்ஸிங் தான் நல்லது.
முடி பராமரிப்பு பொறுத்தவரையில், அம்மாவுக்கு தெரிஞ்ச ஒருத்தங்க, எல்லா பொருட்களையும் சேர்த்து’ ஒரு எண்ணெய் தயார் பண்ணுவாங்க.. அதுதான் இரவு நேரம் கிடைக்கும் போது’ மிதமா சூடாக்கி, தலையில மசாஜ் செய்துவிட்டு, காலையில் எழுந்ததும் தலைக்கு குளிப்பேன். இதை அடிக்கடி பண்ணாலே முடி கொஞ்சம் மிருதுவாக இருக்கும். முடி கொட்டுறது குறையும்.
நெய் வைக்கலாம். நெய் வைக்கும் போது முடி இன்னும் பிரகாசமா மாறும்.
பொடுகு தொல்லைக்கு, எலுமிச்சையும், தயிரும் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், அது சரியாகிடும்.
வெங்காயம் மாஸ்க்’ வாழ்க்கையிலே ஒருவாட்டி வச்சேன். அப்புறம் வைக்கக் கூடாதுனு முடிவு பண்ணிட்டேன். ஒருவாரம் வரைக்கும் கண்ணு எரிஞ்சிட்டே இருக்கும்.
முடி வளரதுக்காக ஆரஞ்சு, கேரட் ஜூஸ் குடிப்பேன். கருப்பு நிற முடிக்காக’ கறிவேப்பிலை ஜூஸ் அதிகமா சாப்பிட்டேன்.
டயட் பொறுத்தவரையில், காலையில், 2-3 முட்டை சாப்பிடுவேன். அம்மா ஜூஸ் கொடுத்து அனுப்புவாங்க. இல்லன்னா இட்லி சாப்பிடுவேன். அதிகம் சாப்பிடமாட்டேன், வயிற்றுக்கு எவ்ளோ போகுதோ அவ்ளோதான்.
இரவு, பாதாம், கருப்பு திராட்சை ஊறவைத்து காலை எழுந்ததும் சாப்பிடுவேன். மதியம் புரொடக்ஷன் சாப்பாடு தான். ரொம்ப பசியெடுத்தா வேணா, ஆர்டர் பண்ணுவேன். பிறகு நைட்டு வழக்கம்போல வீட்டு சாப்பாடு தான் என ஹிமா பிந்து தனது அழகு பராமரிப்பு குறித்து பேசினார்..
ஹிமா பிந்து ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த வீடியோ இதோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“