மனிதர்கள் பலரும் தங்களை இளமையானவராக உணரவும், வெளிக்காட்டி கொள்ளவும் தான் விரும்புவார்கள்.
முதுமையை தள்ளி போட்டு உடலையும், மனதையும் இளமையாக வைத்து கொள்ளவும் சில உணவுகள் உதவுகின்றன.
இந்த உணவுகளை உட்கொண்டால், விரைவில் முதுமை ஏற்படுவதைத் தடுக்கலாம்.
பெர்ரி
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி மற்றும் நெல்லிக்காய் ஆகிய உணவுகளில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளான, ஃப்ளேவோனாய்ட்டுகள் சேர்ந்து காணப்படுகிறது. இது கரிம உணவு வகைகளில் கண்டறியப்பட்டுள்ள முதுமையை தடுக்கும் பண்பினையும் தான் வசம் கொண்டுள்ளது.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் நமது வாழ்வு முழுமைக்கும், நமது சருமத்தினையும், ஆரோக்கியமாக வைத்திட தேவையான சுத்தமான ஆரோக்கியமான கொழுப்பு சத்தினை வழங்குகிறது. பெரும்பாலான வட அமெரிக்கர்களின் உணவு முறையில் குறைவாகக் காணப்படும், மோனோ அன் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் செறிந்துள்ள நல்ல கொழுப்புகள் ஆலிவ் எண்ணெயில் அதிகம் காணப்படுகிறது.
கீரை
பசலைக்கீரை, கொலார்டூ கீரைகள், ரோமன் லெட்யூஸ் மற்றும் ஸ்விஸ் கேரட் ஆகியவை வைட்டமின் சி, வைட்டமின் கே, போலிக் அமிலம், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள பசுமையான காய்கறிகள் ஆகும். க்ரீன் கேரட்டில் உள்ள வைட்டமின் பி இதயத்திற்கும், நினைவாற்றலுக்கும் நல்லது. வைட்டமின் ஏ சரும செல்களை புதுப்பிக்க உதவுகிறது
பொதுவாக பச்சை காய்கறிகளில் காணப்படும் லைகோஃபைன், லூடென் மற்றும் பீட்டா கரோட்டீன் சருமத்தின் முதுமைக்கு காரணமான புறஊதாக் கதிர்களை தடுக்கிறது.
பூண்டு
பூண்டில் சுவையும், நன்மையும் சம அளவில் கலந்துள்ளன. கல்லீரலின் இயக்கு திறனை அதிகரிக்கவும், நச்சுகளை அகற்றவும் பூண்டு துணை புரிகிறது.செல் சீரழிவினை தடுக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய நோய்களை தடுக்கிறது. பட்டியலிலுள்ள மற்ற உணவு வகைகளை போலவே பூண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் செறிந்து காணப்படுகிறது. இது அசாதாரண செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது.
13 மணி நேர உண்ணாவிரதம்
ஒரே இரவில் 13 மணி நேரம் அல்லது அதற்கு மேலும் உண்ணா விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள். இப்படி ஓர் இரவில் மட்டும் உண்ணாவிரதம் இருப்பதன் மூலம், செரிமானத்தைக் காட்டிலும் உள் உறுப்புகள் நன்றாகச் செயல்பட உதவுகிறது. இது நாள்பட்ட நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும். இதனால், இன்னும் பல ஆண்டுகள் வாழ்நாள் நீடிக்கும்.