புதுடில்லி : ”அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் நிறுவன ஊழல் வழக்கில், முன்னாள் பாதுகாப்புத்துறைசெயலாளர் எஸ்.கே. ஷர்மா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
காங். தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்தபோது வி.வி.ஐ..பி.க்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலியை சேர்ந்த ‘அகஸ்டா வெஸ்லாண்ட்’ நிறுவனத்திடம் இருந்து ரூ.3500 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க 2010ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை அளிக்க அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் விமானப் படை அதிகாரிகளுக்கு ரூ.360 கோடி லஞ்சம் தரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதில் முக்கிய குற்றவாளியான அப்போதைய மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் எஸ்.கே. ஷர்மா, முன்னாள் ஏர்மார்ஷல் ஜஸ்பீர்சிங் பனேசர் உள்ளிட்ட நான்கு பேர் மீது இன்று சி.பி.ஐ., குற்றபத்திரிகை தாக்கல் செய்தது.
புதுடில்லி : ”அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் நிறுவன ஊழல் வழக்கில், முன்னாள் பாதுகாப்புத்துறைசெயலாளர் எஸ்.கே. ஷர்மா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.காங்.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.