ஆஸ்திரியாவை போல் உக்ரைனை ராணுவமற்ற நாடாக ஆக்க வேண்டும் என ரஷ்ய முன்வைத்த கோரிக்கையை உக்ரைன் நிராகரித்துள்ளது.
ஆஸ்திரியாவை போல் உக்ரைனை ராணுவமற்ற நாடாக ஆக்குவது, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமரசமாக கருப்படலாம் என ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித்தொர்பாளர் Dmitry Peskov கூறினார்.
இந்நிலையில், ஆஸ்திரியா அல்லது ஸ்வீடனுடன் ஒப்பிடக்கூடிய நடுநிலை நிலையை ஏற்றுக்கொள்ள, ரஷ்யாவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உக்ரைன் நிராகரித்துள்ளது.
தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு சர்வதேச படைகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உக்ரைன தெரிவித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் ஆலோசகரும், உக்ரைன் பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றுள்ள Mikhailo Podolyak கூறியதாவது, உக்ரைன் இப்போது ரஷ்யாவுடன் நேரடிப் போரில் ஈடுபட்டுள்ளது.
ஆகவே, உக்ரைன் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவாதங்களை மட்டுமே ஏற்கும்.
மேலும் புதிய ஒப்பந்தத்தில், கையொப்பமிட்ட நாடுகள் உக்ரைனைப் பாதுகாக்க சட்டப்பூர்வமாகக் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என திட்டவட்டமாக Mikhailo Podolyak தெரிவித்துள்ளார்.
சொந்த ராணுவ படைகளை கொண்டுள்ள ஆஸ்திரியா, 1955 ஆம் ஆண்டு ஆஸ்திரிய அரசு ஒப்பந்தம் மற்றும் அதன் அரசியலமைப்பின் மூலம் நடுநிலை நிலைக்குக் கட்டுப்பட்டது.
இது ராணுவக் கூட்டணிகளில் இணைவதையும், ஆஸ்திரிய பிரதேசத்தில் வெளிநாட்டு ராணுவ தளங்களை நிறுவுவதையும் தடை செய்கிறது.
இதேபோன்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டால், உக்ரைன் நேட்டோவில் சேர முடியாமல் போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.