ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு வகுப்பறையில் ஐலவ்யு கூறியஆசிரியருக்கு உறவினர்கள் தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் . அந்த பள்ளியில் முத்தையா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில நாட்களாக ஆசிரியர் முத்தையா அந்த பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு சிறுமி ஒருவருடன் அடிக்கடி தேவையில்லாமல் பேசி வந்ததுள்ளார். இதனையடுத்து, சம்பவத்தன்று வகுப்பறையில் பாடம் எடுப்பது போன்று அந்த மாணவியின் அருகில் அமர்ந்திருந்தார். வகுப்பு முடியும் தருவாயில் அந்த மாணவியை பார்த்து கண்ணடித்து ஐலவ்யூ கூறியதாக கூறப்படுகிறது.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி உள்ளார். மேலும் இந்த பள்ளிக்கு செல்ல மாட்டேன் எனவும் அப்படி சென்றால் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் கூறியுள்ளார் . இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசிரியர் வீட்டிற்குச் சென்று முற்றுகையிட்டனர்.
அப்போது அவரிடம் விளக்கம் கேட்கவே அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் முத்தையா சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அவரை அங்கிருந்த சிலர் அவரை மீட்ட்யூன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியர் சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்