தன்னிடம் படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆபாச படம் மற்றும் வசனம் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தாசர்பட்டி அரசுப்பள்ளியில் 42 வயதான மணிகண்டன்ராஜ் என்ற என்ற ஆசிரியர் அறிவியல் பாடம் எடுத்துவருகிறார்.
இந்த நிலையில் இவர் மாணவர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து ஒரு பத்தாம் வகுப்பு மாணவியின் போன் நம்பரை எடுத்து, அந்த மாணவியின் செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் தினமும் ஆபாச படங்களை அனுப்பி அந்த படத்தில் இருப்பது போல் நாமும் இருக்கலாமா என்று கேட்டுள்ளார்.
மேலும், ஆபாச வசனங்கள் மற்றும் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் பேச்சுக்களை அனுப்பி தினமும் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த மாணவி இதனை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்தார். மேலும் அந்த ஆசிரியரும், மாணவியிடம் இதை யாரிடமாவது வெளியே சொன்னால் மார்க் போட மாட்டேன் என்று மிரட்டியதால் அவர் இதை தன் பெற்றோரிடம் மட்டும் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர் அந்த ஆசிரியர் மீது பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். அதன் பின்னர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.