உலகின் 32வது பெரிய பொருளாதார நாடான பிலிப்பைன்ஸ், ஆசியாவில் 12வது பெரிய பொருளாதார நாடாகவும் உள்ளது. இதற்கிடையில் பிலிப்பைன்ஸில் உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில், எரிபொருள் விலையானது மோசமான நிலையை எட்டியுள்ளது.
இதன் காரணமாக செலவினமானது அதிகரித்துள்ளதாகவும், இந்த நெருக்கடியான நிலையினை சமாளிக்க, பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரிகளை குறைப்பதற்கு பதிலாக, வாரத்தில் 4 நாள் வேலை என்ற திட்டத்தினை ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது.
பிலிப்பைன்ஸ் அரசு எரிபொருள் மீதான கலால் வரியிலிருந்து அரசாங்கம், இந்த ஆண்டு 131.4 பில்லியன் பெசோக்கள் வருவாயை (2.5 பில்லியன் டாலர்) எதிர்பார்க்கிறது.
ரிலையன்ஸ் செய்வது பிராடு வேலை.. அமேசான் வெளியிட்ட அதிரடி விளம்பரம்..!
வரி வருவாய்
ஆக எரிபொருட்கள் விலையை கட்டுக்குள் கொண்டு வர வரியை குறைத்தால் அது அரசின் வருவாயினை குறைக்கும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% குறைக்கப்படும்.
இதற்கிடையில் பொருளாதார திட்டமிடல் கார்ல் சுவா ஏழை 50% குடும்பங்கள் உட்பட, பாதிக்கப்பட்ட துறைகளுக்கு அதிக நேரடி உதவியினை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
வாரத்தில் 4 நாள் வேலை
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான செலவுகளைக் குறைக்க, வாரத்தில் 4 நாள் வேலையை கார்ல் பரிந்துரை செய்துள்ளார். கடுமையான எண்ணெய் விலைக்கு மத்தியில் தான் இந்த பரிந்துரையானது வந்துள்ளது. இந்த நிலையில் தொழிலாளர் துறையால் மூன்று மாத ஊதிய மானியமும் முன்மொழியப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலையேற்றம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மிக மோசமாக எண்ணெய் விலையை அதிகரித்துள்ளது. தனது எரிபொருள் தேவையில் இந்தியாவினை போல அதிகளவு இறக்குமதி செய்யும் பிலிப்பைன்ஸ், விலை அதிகரிப்பினால் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது. எனினும் தற்போது சீனாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தேவை குறையலாம் என்ற கவலை தற்போது எழுந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் பேரலுக்கு 100 டாலர்களுக்கு மேலாக சரிவினைக் கண்டுள்ளது.
பெல்ஜியத்தின் அறிவிப்பு
இதற்கு முன்பாக கொரோனா பெருந்தொற்று மத்தியில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை, என்ற சட்ட வரைவை பெல்ஜியம் அரசு கொண்டு வந்தது. அதன்படி வாரத்தின் 4 நாட்கள் மட்டுமே பணி என்றும், மீதமிருக்கும் நாட்களில் ஊழியர்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடலாம் என்பதையும் தெரிவித்தது. இது ஊழியர்கள் பணிபுரியும் நேரம், அவர்கள் குடும்பத்தினருடன் செலவழிக்கும் நேரம் என ஒரு நெகிழ்வுத் தன்மையை அளிக்கும் என கூறியுள்ளது.
ஐஸ்லாந்து நிலவரம்
ஐஸ்லாந்து கடந்த 2015 முதல் 2019 வரையில் இதே மாதிரியை சோதனை செய்தது. அதன் பிறகு வேலை நேரத்தினை 40ல் இருந்து 35 அல்லது 36 மணி நேரமாக குறைத்து, ஊதியத்தினை அதே லெவலை பராமரித்தது. இந்த சோதனை காலகட்டத்திற்கு பிறகு தொழிற்சங்கங்கள் நிரந்தர வேலை நேர குறைப்பு பற்றிய பேச்சு வார்த்தைகளை நடத்தினர். தற்போது சுமார் 86% ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை உரிமை உள்ளது.
ஸ்காட்லாந்து
இதே போல தற்போது ஸ்காட்லாந்தும் இந்த திட்டத்தினை பரிசோதனை செய்து வருகின்றது. இதனை ஊக்குவிக்கும் நோக்கில் நிறுவனங்களுக்கு சுமார் 10 மில்லியன் பவுண்டுகளையும் ஊக்கத் தொகையாக வழங்குகிறது.
ஜெர்மனி & ஜப்பான்
ஜெஎர்மணியில் சிறிய அளவிலான ஸ்டார்ட் அப்கள் இந்த நடைமுறையை சோதனை செய்து வருகின்றன.
இதே ஜப்பானில் பெரிய பெரிய நிறுவனங்கள் கூட இந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றன. பேனாசோனிக் கார்ப் ஜனவரி மாதம் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. இது சர்வதேச அளவில் வளர்ந்து வரும் ஜப்பான் நிறுவனமாகும்.
This country is now trial with 4 day work week ideas amid to cut rising cost
This country is now trial with 4 day work week ideas amid to cut rising cost/வாரத்தில் 4 நாள் வேலை.. 3 நாட்கள் விடுமுறை.. ஏன்.. காரணத்த கேட்டா அசந்துருவீங்க..!