புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 2020 மார்ச்சில் விதிக்கப்பட்ட, ‘விசா’ கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. ‘ஏற்கனவே வழங்கிய விசாக்கள் செல்லுபடியாகும்’ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து பயணியர் வருவதற்கு, 2020 மார்ச்சில் தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்கள் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டது.தற்போது, கொரோனா வைரஸ் மூன்றாவது அலை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதையடுத்து, வெளிநாடுகளுக்கான விமான சேவை சமீபத்தில் துவங்கியுள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான விசாக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.’ஏற்கனவே, 156 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட ‘இ – விசா’ எனப்படும் மின்னணு விசா செல்லுபடியாகும். அமெரிக்கா மற்றும் ஜப்பானைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும்,
10 ஆண்டு சுற்றுலா விசாவும் செல்லுபடியாகும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், புதிதாக விசா கேட்டு விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், தலிபான் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கு மட்டும் இவை பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.
Advertisement