தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும்
விஜய்
தற்போது நெல்சன் இயக்கத்தில்
பீஸ்ட்
படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இதையடுத்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் விரைவில் பீஸ்ட் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பூஜா ஹெக்டே
நாயகியாக நடிக்க செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்
அனிருத்
இசையில் சமீபத்தில் வெளியான
அரபிக் குத்து
பாடல் செம ஹிட்டானது. இந்நிலையில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சியின் படத்தில் நடிக்க இருக்கின்றார்.
வெளியான பீஸ்ட் அறிவிப்பு… குழப்பத்தில் ரசிகர்கள்..!
இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்கவுள்ளதாக தெரிகின்றது. தளபதி 66 என்று அழைக்கப்பட்டு வரும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக உருவாகவுள்ளது. இதையடுத்து தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்படி அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கும் விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வியையும் ரசிகர்கள் அவ்வப்போது கேட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாதில் நடிகர் விஜய்யை
பிரஷாந்த் கிஷோர்
சந்தித்ததாக கூறப்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக இவர்கள் சந்திப்பு நீண்டதாகவும், அந்த சந்திப்பில் தமிழ்நாட்டின் அரசியல் பற்றியும், தன் அரசியல் நிலைப்பாட்டை பற்றியும் விஜய் பேசியதாக தகவல்கள் வந்தன. இந்த செய்தியை கேட்ட விஜய் ரசிகர்கள் தளபதி அரசியலுக்கு வரப்போகிறார் என எதிர்பார்த்தனர்.
ஆனால் இதற்கு தற்போது விஜய்யின் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அதாவது விஜய் மற்றும் பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு நடைபெறவே இல்லை. இது அனைத்தும் வதந்தியே, இதைபோல் வதந்தி செய்திகளை நம்பவேண்டாம் என விஜய் தரப்பு விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Vijay Carக்கு Insurance இருக்கு.. சர்ச்சைக்கு ஆதாரத்துடன் முற்றுப்புள்ளி