விஜய் தான் சூப்பர் ஸ்டார்..! அதற்கு அதுதான் காரணம் : பூஜா ஹெக்டே

தென்னிந்திய திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர்
பூஜா ஹெக்டே
. தமிழில் 2012 ஆம் ஆண்டு முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார் பூஜா. அதைத்தொடர்ந்து தெலுங்கு பக்கம் சென்றார். தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்த வைகுண்டபுரம் திரைப்படம் இவரை தமிழிலும் பிரபலமாக்கியது. குறிப்பாக அப்படத்தில் புட்ட போம்மா பாட்டிற்கு இவர் ஆடிய நடனம் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது.

விஜய் அரசியலுக்கு வருவாரா ? விஜய் தரப்பு அளித்த விளக்கம் இதோ..!

இந்நிலையில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் சமீபத்தில் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படம் ரசிகர்களின் அமோகவரவேற்பை பெற்றுவருகிறது. குறிப்பாக அப்படத்தில் பூஜா ஹெக்டேவின் நடிப்பு பலராலும் பாராட்டப்படுகிறது.

பீஸ்ட்

இதனால் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் பூஜா ஹெக்டே தன் அடுத்த படமான
பீஸ்ட்
படத்தைப்பற்றியும் பேசியுள்ளார்.
நெல்சன்
இயக்கத்தில் விஜய்யுடன் நடித்துள்ள பூஜா ஹெக்டே அப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசியுள்ளார்.

நான் இதுவரை பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளேன். ஆனால் விஜய்யை போன்று ஒரு நடிகரை நான் பார்த்ததில்லை. அவரின் கடின உழைப்பு என்னை வியக்கச்செய்தது. இந்த கடின உழைப்பால் தான் அவர் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளார்.

விஜய்

என்னை பொறுத்தவரை
விஜய்
ஒரு சூப்பர்ஸ்டார் என கூறினார் பூஜா ஹெக்டே. பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில் அரபிக் குத்து பாடலுக்கு விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் நடனம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தியேட்டரில் COMEBACK கொடுப்பாரா சூர்யா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.