விரைவில் நாடு முழுவதும் ஊரடங்கு: அரசு எடுக்கும் முடிவு!

சீனாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு அந்நாட்டு மக்களை வாட்டிவரும் சூழலில் நேற்று ஒரே நாளில் புதிதாக 5,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அந்நாட்டின் முந்தைய தினங்களில் நோய் பாதித்தவர்களை காட்டிலும் 2 மடங்காக அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து நாட்டில் உள்ள 19 மாகாணங்களில் தொற்று பாதிப்பு தீவிரமாகி சீனாவின் பல்வேறு வடகிழக்கு நகரங்களில் முழு
ஊரடங்கு
நேற்று அமல்படுத்தப்பட்டது. இந்த சூழலில், சீனாவில் ஒரே நாளில் புதிதாக 5,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிலின் மாகாணத்தில் அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Armed Drones: “அனுப்புங்க காம்ரேட்”.. சீனாவுக்கு போன் போட்ட ரஷ்யா.. அலறும் அமெரிக்கா!

இதன் எதிரொலியாக சீனாவின் பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஹாங்காங் எல்லைக்கு அருகில் உள்ள ஷென்சென் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் 1.7 கோடிக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனிடையே, கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதா, சீனாவில் உருவான
கொரோனா வைரஸ்
உலகம் முழுவதும் வேகமாக பரவியபோது, கடுமையான ஊரடங்கு விதிகள் மூலம் அதனை
சீனா
கட்டுப்படுத்தியது. இரண்டாம், மூன்றாம் அலைகளின் போது, உலகம் முழுவதும் பாதிப்பு கடுமையாக உயர்ந்த போதும் கூட, கட்டுப்பாடுகள் மூலம் அதனை கட்டுக்குள் வைத்திருந்தது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.