Tamilnadu News Update : தென்காசி மாவட்டத்தில், கொலை வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி புதருக்குள் மறைந்ததை தொடர்ந்து காவல்துறை சார்பில் ட்ரோன் பயன்படுத்தி குற்றவாளியை பிடித்துளளனர்.
தமிழகத்தின் தென்பகுதியாக தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது (32),. இவர் மீது கொலை, வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல், கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட ஏராமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரை பிடிக்க காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், ஒவ்வொருமுறையும் காவல்துறையினரிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து வந்துள்ளார்.
இதனால் ஷாகுல்ஹமீதை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தென்காசியில், ஷாகுல் ஹமீது அரிவாள் வைத்து பலரையும் மிட்டி பணம் பறித்துக்கொண்டதாக புகார் வந்தது. மேலும் தன்னை தாக்கி காயப்படுத்திவிட்டதாக ஆட்டு பண்ணை உரிமையாளர் பீர் முகமது என்பவரும் ஹமீது மீது புகார் அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஹமீதை பிடிக்க காவல்துறையினர் முயன்ற போது அவர் அருகில் உள்ள பச்சநாயக்கன் பொத்தை பகுதியில் உள்ள சதுப்பு நிலக்காட்டில் காட்டில் உள்ள புதருக்குள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டறியும் வகையில் தென்காசி காவல்துறை ஆளில்லா ட்ரோனை பயன்படுத்தி குற்றவாளி ஹமீதை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து எஸ்பி அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது, “அடர்ந்த புதர்கள், மரங்கள், சூழ்ந்த சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள பச்சநாயக்கன் பொத்தை பகுதியில் ஹமீது தலைமறைவாகி விட்டார். சதுப்பு நிலங்கள் தண்ணீரால் சூழப்பட்டதால், அவரை கண்டுபிடிப்பதில் காவல்துறைக்கு கடினமான சவால் இருந்தது.
அதனைத் தொடர்ந்து எஸ்.பி., ஆர்.கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், ஹமீதை கைது செய்ய, துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் உட்பட அதிகாரிகள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தென்காசி போலீஸாரின் ஆளில்லா ட்ரோன் விமான பிரிவினரின் உதவியுடன் குற்றவாளியை கைது செய்ய முடிந்தது என்று கூறியுள்ளார்.
பொதுமக்களை ஆயுதத்துடன் அச்சுறுத்திய ரவுடியை டிரோன் மூலம் கைது செய்த தென்காசி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு.https://t.co/r4RFVlHeVA#TenkasiDistrictPolice #szsocialmedia1 #TamilnaduPolice #TruthAloneTriumph pic.twitter.com/OTP64PmTFb
— Tenkasi District Police (@TenkasiPolice) March 15, 2022
இதில் குற்றவாளி ஹமீது தனது தலைக்கு மேலே ட்ரோனைப் பார்த்து பயந்துவிட்டார். அப்போது அதை பார்த்த காவல்துறையினர். அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். தற்போது அவர் காவல்துறையினர் கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளார். “காடுகளுக்குள் மற்றும் பிறருக்கு எளிதில் அணுக முடியாத பகுதிகளில் மறைந்திருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய நாங்கள் பொதுவாக ட்ரோன்களைப் பயன்படுத்துகிறோம்” என்று அந்த அதிகாரி கூறினார்.