பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் தாராபுரம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று சமூகவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் .
இந்நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு மணிகண்டன் பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக தெரிகிறது. அந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஹெல்ப் லைன் மூலம் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் ஆசிரியர் மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.