12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோர்பேவாக்ஸ் எனப்படும் கொரோனா தடுப்பூசி, தமிழகத்தில் இன்று முதல் முதல் போடப்படுகிறது.
ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம், அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. தமிழகத்திற்கு 21 லட்சத்து 60 ஆயிரம் டோஸ் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் தவணை தடுப்பூசி செலுத்தியபிறகு 28 நாட்களுக்கு பிறகு 2ஆவது தவனை தடுப்பூசி செலுத்த வேண்டும்.
மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார். 12 முதல் 14 வயதுக்குட்பட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசி ஒவ்வொரு பள்ளிகளிலும் செலுத்தப்பட உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM