2 ஆண்டுகளுக்குப் பின், இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்கான விமான சேவைகளை இன்டிகோ நிறுவனம் தொடங்கியுள்ளது.
2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் தாய்லாந்து வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, மும்பை, கொல்கத்தா, டெல்லி, சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து பாங்காக் நகருக்கும், டெல்லி மற்றும் மும்பையில் இருந்து புக்கெட் தீவிற்கும் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
தாய்லாந்து செல்வோரிடம் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கோரப்பட்டாலும், அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து வருவோருக்கு விமான நிலையத்தில் வைத்தும், பின் 5 நாட்கள் கழித்தும், என மொத்தம் 2 முறை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.