500 உக்ரைனியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து மனித கேடயமாக பயன்படுத்தும் புடின்: வெளியாகியுள்ள அதிரவைக்கும் தகவல்


ஒரு பக்கம் உக்ரைன் நகர் ஒன்றிலிருந்து 20,000 பேரை ரஷ்ய படைகள் வெளியேற அனுமதித்துள்ள செய்தி சற்று ஆறுதலை அளித்துள்ள நிலையில், மறுபக்கமோ சுமார் 500 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

உக்ரைனிலுள்ள Mariupol நகரிலிருந்து 20,000 பேரை அங்கிருந்து வெளியேற ரஷ்ய படைகள் அனுமதித்துள்ளன. அதன்படி, சுமார் 4,000 கார்களில் புறப்பட்ட உக்ரைனியர்கள் Zaporizhzhia என்ற நகரை சென்றடைந்துள்ளார்கள்.

அதே நேரத்தில் ரஷ்யா அமைத்துக்கொடுத்த பாதை வழியாக புறப்பட்ட உக்ரைனியர்கள் பலர், நேராக ரஷ்யாவைச் சென்றடைந்துள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது.

ஒரு பக்கம் மக்களை வெளியேற அனுமதித்து நல்லது செய்வது போல் காட்டிக்கொள்ளும் ரஷ்யா, மறு பக்கமோ Mariupol நகர மருத்துவமனைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறதாம்.

Mariupol நகர மருத்துவமனைகளில் காணப்படும் காட்சிகள் மனதைக் கலங்கடிக்க செய்வதாக உள்ளன. ஒரு மருத்துவமனையில், பெற்றோர் இல்லாமல் தனியே விடப்பட்டுள்ள குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் ஒரு புறம் படுக்க வைக்கப்பட்டிருக்க, இன்னொரு மருத்துவமனையில் 500 உக்ரைனியர்களை ரஷ்யப் படைகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறார்களாம்.

அந்த மருத்துவமனையை சுற்றியுள்ள வீடுகளை சுற்றி வளைத்த ரஷ்ய படைகள், அந்த வீடுகளிலிருந்து 400 பேரைப் பிடித்து, அவர்களை ஏற்கனவே அந்த மருத்துவமனையிலிருந்த 100 மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுடன் அடைத்து வைத்திருக்கிறார்களாம்.

அவர்களை விட மறுக்கும் ரஷ்ய வீரர்கள், அவர்களை மனித கேடயமாக பயன்படுத்துவதாக அப்பகுதி கவர்னரான Pavlo Kyrylenko என்பவர் தெரிவித்துள்ளார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.