இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் தொடக்கத்திலும் ஏற்றத்திலேயே காணப்பட்டது.
இன்று அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் ஒரு புறம் பேச்சு வார்த்தை நடந்து வந்தாலும், மறுபுறம் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. இன்று வரையில் சமாதானம் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை. ஆக இதுவும் சந்தைக்கு சாதகமாக அமையலாம்.
சர்வதேச சந்தைகள்
அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், டாலரின் மதிப்பானது 5 வருட உச்சத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் அமெரிக்க பங்கு சந்தைகள் கடந்த அமர்வில் ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. இதற்கிடையில் ஆசிய சந்தைகள் பலவும் இன்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. அதன் தாக்கமே இந்திய சந்தையிலும் தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகின்றது.
முதலீடுகள் வெளியேற்றம்
மார்ச் 15 நிலவரப் படி, அன்னிய முதலீட்டாளர்கள் 1249.74 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 98.25 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில், இன்று அமெரிக்காவின் மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்புக்காக முதலீட்டளர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 732.62 புள்ளிகள் அதிகரித்து, 56,509.47 புள்ளிகளாகவும், நிஃப்டி 197.70 புள்ளிகள் அதிகரித்து, 16,860.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 816.35 புள்ளிகள் அதிகரித்து, 56,593.20 புள்ளிகளாகவும், நிஃப்டி 237.40 புள்ளிகள் அதிகரித்து, 16,900.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1690 பங்குகள் ஏற்றத்திலும், 241 பங்குகள் சரிவிலும், 52 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. இதில் நிஃப்டி 50,பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கன்சியூமர்ஸ் டியூரபிள், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாகவும், மற்ற குறியீடுகள் 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள இந்தஸ்இந்த் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சிப்லா, சன் பார்மா, டாடா கன்சியூமர், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸ்இந்த் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது நிலவரம்
தற்போது 09.54 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 780.29 புள்ளிகள் அதிகரித்து, 56,557.14 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 228.3 புள்ளிகள் அதிகரித்து, 16,891.30 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
opening bell: sensex, nifty trade higher, paytm, zomato in focus
opening bell: sensex, nifty trade higher, paytm, zomato in focus/700 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டியின் நிலவரம் என்ன.. முதலீட்டாளர்கள் ஹேப்பி!