ரஷ்யாவின் சேனல் ஒன் தொலைக்காட்சியின் செய்தி ஒளிபரப்பின்போது நோ வார் என்று எழுதப்பட்ட பேனரை தூக்கிப் பிடித்த பெண் ஊழியரை அதிகாரிகள் 14 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.
ரஷ்யாவின் சேனல் ஒன் தொலைக்காட்சியின் மாலை நேர நேரலை செய்தி ஒளிபரப்பின்போது ஒரு சம்பவம் நடந்தது. அதே தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் மரீனா ஒவிசின்னிகோவா என்ற பெண் ஊழியர், உக்ரைனில் நடந்து வரும் போரை நிறுத்தக் கோரியும், போர் வேண்டாம் என்று வலியுறுத்தியும் ஒரு பேனரை செய்தி வாசிப்பாளரின் பின்னால் உயர்த்திப் பிடித்தபடி நின்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர். மரீனாவை கைது செய்தனர். போராட்டம் நடத்துவது தொடர்பாக உள்ள விதிகளை மீறும் வகையில் செயல்பட்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அது முடிந்ததும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு 280 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டியதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
அடி தாங்க முடியலை குருவே.. “நேட்டோ”வே வேண்டாம்.. இறங்கி வரும் உக்ரைன்!
கோர்ட்டுக்கு வெளியே செய்தியாளர்களிடம் மரீனா பேசுகையில், நான் மிகவும் கடினமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளேன். என்னால் இப்போது பேச முடியாது. 14 மணி நேரம் என்னை விசாரித்துள்ளனர். எனக்கு சோர்வாக உள்ளது. பிறகு பேசுகிறேன் என்று கூறி விட்டு அவர் கிளம்பிச் சென்றார்.
இதற்கிடையே, மரீனாவின் போராட்டம் தனி நபருடைய போராட்டம்தான் . இது திட்டமிட்ட போராட்டம் அல்ல, அவர் எந்தவிதமான சட்டவிரோத கும்பலுடனும் தொடர்புடையவர் அல்ல என்று கிரம்ளிந் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
கோர்ட்டுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியபோதும் கூட இதையே பிரதிபலித்தார் மரீனா. தனிப்பட்ட முறையில்தான் எனது எதிர்ப்பைக் காட்டினேன். இது நானாக சுயமாக நடத்திய போராட்டம் என்றார் அவர். மரீனாவின் தாயார் ரஷ்யராக இருந்தாலும் கூட அவரது தந்தை உக்ரைனைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இதனாலும் கூட உக்ரைன் மீது போர் வேண்டாம் என்று அவர் சொல்லியிருக்கலாம் என்று தெரிகிறது.
Armed Drones: “அனுப்புங்க காம்ரேட்”.. சீனாவுக்கு போன் போட்ட ரஷ்யா.. அலறும் அமெரிக்கா!
ரஷ்யாவும், உக்ரைனும் அண்ணன் தம்பியாக இருந்தாலும் கூட, இரு நாட்டு மக்களும் பாசம் காட்டுபவர்களாக இருந்தாலும் கூட நேட்டோ என்ற ஒற்றைச் சொல் இரு நாடுகளையும் பிரித்துப் போட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல்கள் நிறைய, உறவுப் பிணைப்பும் அதிகம். இரு நாடுகளிலும் மணம் முடித்தவர்கள் அதிகம், இரு நாடுகளிலும் நண்பர்கள் அதிகம். இரு நாடுகளுக்கும் இடையே உறவுகளும் அதிகம். இப்படி இருந்தும் கூட ஒரு சாதாரணப் பிரச்சினையால் இன்று இரு நாடுகளும் முட்டிக் கொண்டிருப்பது மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.