தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்
. அந்த திருமணத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும் மகள் அடம்பிடித்ததால் சம்மதித்தார் ரஜினி என்று அப்பொழுது செய்திகள் வெளியானது.
இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து தனுஷை பிரிந்துவிட்டார் ஐஸ்வர்யா. மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காக சேர்ந்து வாழுங்கள் என்று ரஜினி கோபமாக கூறியதை கேட்டு பயந்த ஐஸ்வர்யா, முதலில் சரி என்றாராம்.
தனுஷுடன் மீண்டும் சேர அவர் முயற்சியும் செய்திருக்கிறார். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடையவே, இனி
தனுஷ்
வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டாராம் ஐஸ்வர்யா.
பிள்ளைகளுக்காக இத்தனை ஆண்டுகள் பொறுத்தது போதும் என்கிற முடிவில் இருக்கிறாராம். முன்னதாக ஐஸ்வர்யாவிடம் ரஜினி கூறியதாவது,
நல்ல செய்தி சொன்ன ஐஸ்வர்யா: ‘அந்த’ பயத்தில் ரசிகர்கள்
எனக்கும், உன் அம்மாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் நான் மகள்கள் தான் முக்கியம் என்று லதாவை பிரிந்து செல்லவில்லை. ஆனால் உனக்கு பிள்ளைகளை விட உன் சந்தோஷம் முக்கியமாகிவிட்டதா என்றாராம்.
உங்களை போன்று பிள்ளைகளுக்காக என்னால் திருமண பந்தத்தில் இருக்க முடியாது. என் வழியும் தனி வழி தான் அப்பா என்று ரஜினியிடம் தெரிவித்தாராம் ஐஸ்வர்யா.