சென்னை: சென்னையில் கட்டப்படும் அடுக்குமாடி கட்டிட உள்கட்டமைப்பு கட்டணம் சதுர மீட்டருக்கு ரூ.20 உயர்த்தி சிஎம்டிஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக சி.எம்.டி.ஏ. தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் போன்றவை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கி வருகிறது. அதற்கான கட்டணங்களும் வசூலித்து வருகிறது. இந்த கட்டணம் கட்டிடத்தின் சதுர மீட்டர் அளவுக்கேற்ப நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
அதன்படி கட்டிட உள் கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் தற்போது சதுர மீட்டருக்கு ரூ.198 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை சதுர மீட்டருக்கு கூடுதலாக ரூ.20 அதிகரித்து, அதனை ரூ.218 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி நடைமுறைக்கு வருவதாக சி.எம். டி.ஏ. தெரிவித்துள்ளது.