பொதுத்துறை வங்கிகள் மார்ச் 17 முதல் மார்ச் 29, 2022 வரையிலான 13 நாட்களில் ஏழு நாட்களுக்கு மூடப்படுகிறது.
இதனால் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்குச் செல்லும் முன் எந்த நாட்களில் வங்கிகள் விடுமுறை என்பதைத் தெரிந்து கொண்டு அதன் பின் வங்கி பணிகளைத் திட்டமிடுங்கள் இல்லையெனில் வங்கி பணிகளைக் குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் போகலாம்.
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் மார்ச் 28, 29-க்கு ஒத்திவைப்பு..! நாளை வங்கிகள் இயங்கும்..!

ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வங்கி விடுமுறை காலண்டரின் படி, மார்ச் 17 முதல் 29 வரையிலான காலகட்டத்தில் ஏற்கனவே திட்டமிட்ட ஐந்து விடுமுறைகள் உள்ளன. தொழிற்சங்கங்களின் அழைப்பின் பேரில் வங்கி ஊழியர்கள் அமைப்பின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக 2 நாள் அரசு வங்கிகள் மூடப்படுகிறது.

7 நாள் விடுமுறை
இருப்பினும், வங்கி விடுமுறை நாட்களில், வாடிக்கையாளர்கள் தங்கள் முக்கியமான பணிகளை முடிக்க நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்தலாம். மேலும், இந்த 7 விடுமுறை நாட்களில் ஒரு சில விடுமுறைகள் நாளில் பொதுத்துறை வங்கிகளுக்கு மட்டுமே மூடப்பட உள்ளது. இதனால் தனியார் வங்கிக் கிளைகள் இந்த நாட்களில் திறந்திருக்கும்.

ஹோலி பண்டிகை
ஹோலி பண்டிகை காரணமாக மார்ச் 17 மற்றும் மார்ச் 18ஆம் தேதி நாட்டின் பல பகுதிகளில் வங்கிகள் மூடப்பட உள்ளது. இது பல மாநிலங்களில் மாறுபட்ட தினத்தில் கொண்டாடப்படும் காரணத்தால் தத்தம் மாநிலத்தவர் கணக்கில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு
டேராடூன், கான்பூர், லக்னோ, ராஞ்சி ஆகிய பகுதிகளில் மார்ச் 17ஆம் தேதி ஹோலி கொண்டாடப்படும் நிலையில் மற்ற மாநிலத்தில் மார்ச் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மார்ச் 18ஆம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

பிற விடுமுறை நாட்கள்
இதைத் தொடர்ந்து கீழ் வரும் நாட்களில் வங்கிகள் இயங்காது.
ஞாயிறு: மார்ச் 20
நான்காவது சனிக்கிழமை: மார்ச் 26
ஞாயிறு: மார்ச் 27
வங்கி வேலைநிறுத்தம்: மார்ச் 28
வங்கி வேலைநிறுத்தம்: மார்ச் 29
Bank Holidays: Banks shut for 7 days between March 17-29
Bank Holidays: Banks shut for 7 days between March 17-29 அடுத்த 13 நாளில் 7 நாள் வங்கிகள் விடுமுறை..!