ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஹர்பஜன்சிங் மேல்சபை எம்.பி.யாக வாய்ப்பு

அமிர்தசரஸ்:

5 மாநில தேர்தலில் பஞ்சாப்பில் காங்கிரசை வீழ்த்தி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

பஞ்சாப் முதல்-மந்திரியாக பகவந்த்மான் நேற்று பதவியேற்றார்.

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றியது. இதனால் அம்மாநிலத்தில் இருந்து அந்த கட்சிக்கு 6 மேல்-சபை எம்.பி. உறுப்பினர்கள் புதிதாக கிடைக்கிறார்கள்.

பஞ்சாப்பில் அடுத்த மாதம் 5 மேல்-சபை உறுப்பினர்களின் எம்.பி. பதவி காலியாகிறது. இதையடுத்து காலியாக உள்ள அந்த இடங்களை நிரப்ப ஆளும் ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு மேல்-சபை எம்.பி. பதவி கொடுக்க முதல்-மந்திரி பகவந்த்மான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பஞ்சாப்பில் இருந்து அவர் மேல்-சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.