ஆயுதங்களை போட்டு ரஷ்யாவிடம் சரணடையுமாறு உக்ரேனிய துருப்புகளுக்கு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அழைப்பு விடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
குறித்த வீடியோ உக்ரேனிய டிவி சேனலான Ukrayina 24-ன் இணையதளத்தில் ஒளிபரப்பாகியுள்ளது, மேலும் ஜெலன்ஸ்கி பேசிய உரை எழுத்து வடிவிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
குறித்த வீடியோவில் ஓடியோவுக்கு ஏற்ப ஜெலன்ஸ்கி உதடுகள் அசைந்தாலும், அவரது தலையும் குரலும் பொருத்தமாக இல்லை.
இதுகுறித்து Ukrayina 24 டிவி வெளியிட்ட அறிக்கையில், அதன் இணையதளமும், டிக்கரும் ஹேக் செய்யப்பட்டதாகவும், தற்போது சரி செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது.
A deepfake of Ukrainian President Volodymyr Zelensky calling on his soldiers to lay down their weapons was reportedly uploaded to a hacked Ukrainian news website today, per @Shayan86 pic.twitter.com/tXLrYECGY4
— Mikael Thalen (@MikaelThalen) March 16, 2022
அதேசமயம், இணையத்தில் பரவி வரும் தன்னுடைய வீடியோ போலி என ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
#Ukraine Hackers published a deep fake of @ZelenskyyUa urging citizens to lay down their arms. He responded immediately:
“If I can offer someone to lay down their arms, it’s the Russian military.Go home.Because we’re home. We are defending our land, our children & our families.” pic.twitter.com/TiICf3Z5Te— Hanna Liubakova (@HannaLiubakova) March 16, 2022
மேலும், ரஷ்ய துருப்புகளை தான் ஆயுதங்களை போட்டு விட்டு நாடு திரும்புமாறு நான் பரிந்துரைப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.