இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் : காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால்

இண்டியன்வெல்ஸ்,
பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தய சுற்று இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் ஸ்பெயின் அணியின் நட்சத்திர டென்னிஸ் வீரரும் உலகின் முன்னாள் நம்பர் 1 வீரருமான ரபேல் நடால் அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்காவை எதிர்கொண்டார்.

ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய நடால்  7-6 (3), 7-6 (5) என்ற கணக்கில் ரெய்லியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி போட்டியில் ரபேல் நடால் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிர்கியோஸ் உடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.