‘ஜாலி ஓ ஜிம்கானா’ பாடலுக்குக் காத்திருக்கும் இந்த நேரத்தில் விஜய்யின் வாய்ஸில் ஹிட்டடித்த பாடல்களை ஒரு throwback பார்க்கலாமா!
‘ரசிகன்’ படத்தில் ‘பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி’ பாடல் தான் விஜய் முதன்முதலாக பாடியது.1994 இல் வெளியான இந்தப் படத்தின் இசையமைப்பாளர் தேவா. இயக்கம் எஸ்.ஏ.சந்திரசேகர்.
1995 இல் ‘தேவா’ படத்தில் மூன்று பாடல்களை விஜய் பாடியிருக்கிறார். இதற்கும் இசை தேவா தான். ‘அய்யயோ அலமேலு’ பாட்டில் விஜயின் துள்ளல் குரலைக் கேட்க முடியும்.
அதே வருடம் வெளியான படம் விஷ்ணு. இப்போது வரைக்கும் கேட்கப்படும் ‘தொட்ட பெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா’ குத்துப் பாடல் அந்தப் படத்தில்தான் இடம்பெற்றது.
‘விழியில் விழி மோதி இதய கதவொன்று திறந்ததே’ – காதலுக்கு மரியாதை படத்தில் வரும் ‘ஓ பேபி பேபி’ பாடலில் அதுவரைக்கும் கேட்காத விஜய் குரல் ஒன்றைக் கேட்கச் செய்தது இளையராஜாவின் இசை.
பத்ரி படத்தில் ‘என்னோட லைலா வர்றாளே மெயிலா’ ஜாலியாக பாடியிருப்பார் விஜய். கார்ட் போடாமலே விஜய் குரலை அடையாளம் கண்டு கொண்டாடத் தொடங்கியது ரசிக சமூகம்.
வடிவேல் விஜய் இணைந்து பாடிய ‘போடாங்கோ…’ பாடல் பகவதி படத்தில் இடம்பெற்று எல்லா ஏரியாவிலும் ஹிட்டடித்தது.
சச்சின் படத்தில் ஒரு குத்து பாட்டு. விஜய் பாடிய 25-ஆவது பாடல் அது ‘வாடி வாடி’ . அதுக்கப்புறம் பாடகர் விஜயை சில வருடங்களாகப் பார்க்க முடியவில்லை.
இடைவெளிக்கும் சேர்த்ததுபோல அமைந்த பாடல் தான் ‘கூகுள் கூகுள்’. ஆண்ட்ரியா, விஜய் இணைந்து பாடிய இந்தப் பாடல் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்.
விஜய் நிஜத்தில் பேசுவதையே முதல் லைன்னாக பிடித்து எழுதியது போலான பாடல் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ தலைவா படத்தில்.
ஜில்லா படத்தில் ‘கண்டாங்கி கண்டாங்கி’ பாடலில் விஜய்யின் கணீர் குரலில் காதல் வரிகளைக் கேட்கமுடியும்.
பிகில் படத்தில் வெறித்தனம் பாடல். ரசிகர்கள் வெறித்தனமாக இந்தப் பாடலைக் கொண்டாடித் தீர்த்தனர்.
‘குட்டி ஸ்டோரி’ பாடல் ரொம்ப க்யூட்டாக வாழ்க்கையைப் பற்றி விஜய் பாடியிருக்கும் பாட்டு. துள்ளலோடு குதூகலிக்கும் விஜய்யின் குரலில் இன்னொரு பாடலாக வெளிவர உள்ள ஜாலி ஓ ஜிம்கானாவுக்கு தற்போது ரசிகர்கள் வெயிட்டிங்!