புதுடில்லி :இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தன்னுடைய கணிப்பை, முந்தைய கணிப்பிலிருந்து குறைத்து அறிவித்துள்ளது, தர நிர்ணய நிறுவனமான ‘மூடிஸ்’.
இதற்கு முன்பாக, நடப்பு ஆண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என, இந்நிறுவனம் அறிவித்திருந்தது. இப்போது, அதை குறைத்து, 9.1 சதவீதமாக இருக்கும் என தெரிவித்து உள்ளது.மேலும் தெரிவித்துள்ளதாவது:
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், உலகளவில் மூன்று முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பொருட்களின் விலை அதிகரிப்பு, நிதி மற்றும் வணிக சீர்குலைவுகள், புவிசார் அரசியல் பாதிப்புகளால் நம்பிக்கை குறைவு என, முக்கிய பாதிப்புகளை
ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவை பொறுத்தவரை, கச்சா எண்ணெய் விலை, அதன் பொருளாதாரத்தை அதிகம் பாதிப்பதாக உள்ளது. அதிக எரிபொருள் செலவு, நாட்டின் திட்டமிட்ட மூலதன செலவினங்களை பாதிக்கும்.
இதனால், இந்தியாவின் வளர்ச்சியை, நடப்பாண்டில் 9.5 சதவீதமாக கணித்திருந்ததை, 9.1 சதவீதமாக குறைத்து அறிவிக்கிறோம். அடுத்த ஆண்டில், வளர்ச்சி 5.4 சதவீதமாக இருக்கும். நடப்பு ஆண்டு இறுதியில், பணவீக்கம் 6.6 சதவீதமாக இருக்கும்.
இவ்வாறு அறிவித்து உள்ளது.சீனாவை பொறுத்தவரை, வளர்ச்சி, நடப்பு ஆண்டில் 5.2 சதவீதமாகவும்; அடுத்த ஆண்டில் 5.1 சதவீதமாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.
Advertisement