டெல்லி: இந்தியா – ஜப்பான் இடையேயான உச்சி மாநாடு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜப்பான் பிரதமர் 3 நாள் பயணமாக இந்தியா வருகிறார்.
