இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை ஆய்வு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்றும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என தெரிவித்துள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.