கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை, 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனுதவி பெறும் வகையில் இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
கொரோனாவை தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் இலங்கையில், சுற்றுலா, ஏற்றுமதி ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதன் காரணமாக அந்நாட்டின் அந்நியச் செலாவணி வீழ்ச்சியடைந்ததுடன், அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது. இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களை வாங்க கடன் பெறும் வகையில், எஸ்பிஐ வங்கியுடன் இலங்கை அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், இலங்கை நாட்டிற்கு இந்தியா துணை நிற்கும் என்றார். கடந்த மாதம் எரிபொருள் கொள்முதல் செய்ய இலங்கைக்கு இந்தியா 3 ஆயிரத்து 750 கோடி ரூபாயை கடனுதவியாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.