இளையராஜாவுடன் இணைகிறார் தேவிஸ்ரீ பிரசாத்
சமீபத்தில் துபாயில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்திய இசைஞானி இளையராஜா மார்ச் 18ஆம் தேதியான நாளை சென்னையில் உள்ள தீவுத்திடலில் ராக் வித் ராஜா என்ற பெயரில் ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் இளையராஜாவுடன் பிரபலமான இசையமைப்பாளர்கள் மற்றும் பின்னணி பாடகர்கள் பங்கேற்க உள்ளார்கள். இந்த இசை நிகழ்ச்சியில் தற்போது இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைய உள்ளார். இளையராஜாவுடன் இணைந்து தேவிஸ்ரீபிரசாத்தும் இசை நிகழ்ச்சியை நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் மற்றும் ஒரு போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. அதோடு ரிகர்சலின் போது இளையராஜாவுடன் எடுத்த போட்டோவையும் தேவிஸ்ரீ பிரசாத் வெளியிட்டுள்ளார்.