ஜெருசலேம்:இஸ்ரேலில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது.கடந்த 2019- இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. பின்னர் கொரோனா மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது.
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் அவை கண்டறியப் பட்டன. கடந்த ஆண்டு நவம்பரில் முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவியது. இது பரவிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்தநிலையில் இஸ்ரேலில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது. இது ஒமைக்ரானின் 2 துணை வகைகள் இணைந்து தோன்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்திற்கு வந்த 2 பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இது உறுதியானது.
இந்த மாறுபாடு இன்னும் உலகம் முழுவதும் கண்டறியப்படவில்லை என்று இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதற்கு முன் டெல்டா வகை மற்றும் ஒமைக்ரான் வைரஸ் இணைந்து “டெல்டாக்ரான்” உருவானதுபோல் ஒமைக்ரானின் வைரசின் துணை வகைகளான பி.ஏ.-1 மற்றும் பி.ஏ.-2 ஆகியவை இணைந்து புதிய வகையாக மாறியுள்ளது.
Advertisement