புதுடெல்லி:
உக்ரைனில் சிக்கி தவித்த மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது.
உக்ரைனில் வான் எல்லை மூடப்பட்டுள்ளதால் பக்கத்து நாடுகளான போலந்து, அங்கேரி, ருமேனியோ, சுலோவாக்கியா ஆகியவற்றுக்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
இதுவரை 22,500 இந்தியர்கள் பயணிகள் விமானம், விமானப்படை விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் எஞ்சிய இந்தியர்களை ரஷிய நகரங்கள் வழியாக அடுத்தகட்டமாக மீட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அங்குள்ள பெல்கோராட் குர்சிக்குக்கு இந்திய மாணவர்களை வரவழைத்து அங்கிருந்து மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள எஞ்சியிருக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றி ரஷிய நகருக்கு வரவழைக்கும் பணியில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது.