உக்ரைன் போர் தொடர்பான சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என ரஷ்யா அறிவித்துள்ளது.
கடந்த மாதம் ரஷ்ய ராணுவம் படையெடுத்த நிலையில், தாக்குதலை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தை உக்ரைன் நாடியது.
இதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என ரஷ்யாவிற்கு உத்தரவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து, உலகளாவிய ஒப்பந்தங்களின் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு ரஷ்யாவை கட்டுப்படுத்தும் என உக்ரைன் கூறியிருந்தது.
இந்நிலையில், அந்த உத்தரவினை கணக்கில் கொள்ள முடியாது என தெரிவித்த ரஷ்ய அதிபரின் செய்தித்தொடர்பாளர் பெஸ்கோவ், இந்த உத்தரவை அமல்படுத்த இருதரப்பு ஒப்புதலை பெற வேண்டும் என்றும் இது வரை எந்த ஒப்புதலும் பெறவில்லை என்றும் கூறினார்.